Pages

Sunday 18 January 2015

இதுல கூடவா வதந்தியை கெளப்புறது? : அமலாபால் அப்செட்

திருமணம் ஆன கையோடு புள்ளைக்குட்டிங்களை பெற்றுக்கொள்வது என்பது நடிகைகளைப் பொறுத்த வரை ஒரு புது எண்ட்ரி மாதிரி தான். ஆமா அந்த நடிகை கர்ப்பமா இருக்காங்க, இல்லை சும்மா தான் இருக்காங்க என்று அதைப்பற்றிய பரபரப்பு செய்திகள் வந்தபிறகு சம்பந்தப்பட்ட நடிகைகள் அதற்கு விளக்கம் சொல்லி பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்கள்.
இப்படி ஒரு பப்ளிசிட்டி மேட்டரில் தான் மாட்டி விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது அமலாபாலுக்கு.

டைரக்டர் விஜய்யை திருமணம் செய்த அமலாபால் திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். ஆனால் தனது கணவர் விஜய்யுடன் பல இடங்களுக்கு ஹனிமூன் ட்ரீப் கொண்டாடினார்.
சமீபத்தில் ஒரு அவார்டு பங்ஷனுக்கு அமலாபால் வந்தபோது அவரது வயிறைப் பார்த்த எல்லோரும் நலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேலும் அண்மையில் அவர் தனது கணவர் இயக்குனர் விஜய்யுடன் இருக்கும் போட்டோ ஒன்று வெளியானது. அதில் அமலாவின் வயிறு பெரிதாக இருந்தது. இதனால் அவர் நிச்சயம் கர்ப்பமாக உள்ளார் என்று செய்திகள் வெளியானது.
அவ்வளவு தான் அமலாபால் கர்ப்பமான விஷயம் ஊர் முழுக்க பரவிவிட நல்ல விஷயத்தை என்கிட்ட கூட சொல்லலீயே என்று கோபித்துக் கொண்டார்களாம் அவரது நெருங்கிய நண்பர்கள்.
இதனால் கடுப்பான அமலாபால் இதுல கூடவா வதந்தியை கெளப்புறது? என்று டென்ஷனாகி செம அப்செட்டாகி விட்டாராம்.
வேறு வழியில்லாமல் இந்த வருஷம் கிறிஸ்துமஸை நான் கொஞ்சம் ஓவராகவே என்ஜாய் பண்ணிட்டேன். அதனால் வந்தது தான் இந்த தொப்பை. அதைப் பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக சில மீடியாக்கள் எழுதி விட்டன.
நான் கர்ப்பமாக இருந்தால் அதை ஏன் மறைக்க வேண்டும். நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதை நானே உங்களிடம் தெரிவிப்பேன் என்று விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு போய் விட்டார் அமலாபால்.
எப்படியோ இதுவும் ஒரு பப்ளிசிட்டி தானே..?

0 comments

Post a Comment