Pages

Sunday 18 January 2015

பரதேசி படத்திற்கு 2 விருதுகள் – லண்டன் திரைப்பட விழா

படத்தின் போஸ்டரை பார்த்து அதில் கதாநாயகனைக் கண்டுபிடிப்பதே கடினம். அந்தளவிற்கு படத்தின் ஆட்களை சரியாக தேர்வு செய்து இயக்கியிருப்பார் பாலா. படத்தின் ஒவ்வொரு காட்சியும் தத்ரூப நடிப்பாக இருக்க வேண்டும் என என்னும் பாலாவின் இந்தப் படம் லண்டனின் சர்வதேச
திரைப்பட விழாவின் இரு விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் சிலி, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளின் படங்களும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் நமது நாட்டின் பரதேசி திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த வெளிநாட்டு இயக்குனர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த ஆடை என 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.  இதில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த உடையலங்காரம் என்ற இரு பிரிவுகளில் செழியன் மற்றும் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் விருதுகள் பெறுவதற்கு தேர்வாகியுள்ளனர். இந்தச் செய்திகள் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படிருந்தன.

0 comments

Post a Comment